நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு, சேதமடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைக்க சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்) வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், “இது முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. நாட்டின் சேதத்தை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் இன்னும் தொடர்ந்து […]
600-க்கும் மேற்பட்டோர் பலியான நேபாள பெருவெள்ளப் பேரிடரில், இந்தியாவின் விரைவான உதவிகளை நேபாள அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ‘பேரன்புடனும், தாராள மனதுடனும்’ செயல்படுவதாக நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மத்திய நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் […]
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அடித்துச்செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்த பணத்தை கொள்ளையடித்த 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு வங்கி லாக்கர், தாதிங் மாவட்டத்தில் உள்ள கால்ச்சி ஊரக நகராட்சி-4க்கு உட்பட்ட பெல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் ஒதுங்கியது. லாக்கர் சிக்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள், […]
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த சீசனின் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். காயமும் விலகலுக்கான காரணமும்: சமீபத்தில் நடைபெற்ற லாசேன் (Lausanne) டைமண்ட் லீக் போட்டியில் 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து […]
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ள நிலையில், சடலங்களைப் பாதுகாக்கவும் அடையாளம் காணவும் இடம் இன்றி நேபாள அரசு கடும் அவதிப்பட்டு வருகிறது. நேபாளம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனை பிரேதக் கிடங்குகளிலும், ஒட்டுமொத்தமாக சுமார் 350 சடலங்களை மட்டுமே வைப்பதற்கான வசதி உள்ளது. ஆனால் பலியானோர் எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், சடலங்களை வைக்க இடமின்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இன்னும் […]
நேபாளம்-திபெத் எல்லையில் உள்ள இமயமலைப் பகுதியில் பனிப்பாறை சரிந்து பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பயங்கரக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த இந்த இயற்கை பேரிடரில் நேபாளத்தில் இதுவரை 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,500-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் துறைமுகத்தில் (Gyirong Port) ஏற்பட்ட பயங்கர மண்சரிவுக்குக் காரணமான பனிப்பாறை சரிவைச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். சீன […]
இந்திய அணி இதுவரை மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2007-ல் எம்.எஸ். தோனி, 2024-ல் ரோஹித் சர்மா மற்றும் 2026-ல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனான சூர்யகுமார் யாதவ், தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளார். தேசிய அணியில் தனது இடத்தை இழந்திருந்தாலும், மீண்டும் அணியில் இடம் […]
ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சின்சினடா வசிஷ்டா பாலத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையை தனியாக விட்டுவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, ஆற்றில் குதித்தவர்கள் வேல்பூரு கிராமத்தைச் சேர்ந்த சாய் (29) மற்றும் அவரது மனைவி ஷிரீஷா (28) என்பது தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், இந்தத் தம்பதியினர் […]
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், ஒரு பெண் உயிரியல் ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ உலகிலும் சட்ட ரீதியாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்கு தாயான 27 வயதுடைய அப்பெண், குழந்தை இல்லாத வேறொரு தம்பதியினருக்கு உதவுவதற்காக எந்தவொரு பிரதிபலனும் இன்றி ‘வாடகைத் தாயாக’ மாற ஒப்புக்கொண்டார். இதற்காக கருத்தரிப்பு மையத்தின் மூலம் அந்த தம்பதியின் கரு அவரது கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், […]
அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான தங்குமிட வசதிகள் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாக பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அங்கு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கு இந்திய ‘பி’ அணியை அனுப்ப பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 முதல் […]

