சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection – UTI) என்பது பெண்களிடையே பரவலாக காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகும். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதால், பாக்டீரியா தொற்றுகள் மிக விரைவாகச் சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தை அடைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக நீர்ச்சத்து குறைபாடு அல்லது தனிநபர் சுகாதாரக் குறைபாடு ஆகியவை UTI-க்குக் காரணங்களாகக் கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. […]

சென்னையில் இன்று காலை முதலே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம், மேதா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி […]

கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த 40 வயது கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கார்த்திக்கின் மனைவி தனது 32 வயது தங்கைக்கு சில நாட்களுக்கு முன்பு நீலாம்பூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணம் முடிந்து நான்கே நாட்களில் புதுப்பெண் திடீரென […]

குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தில் விபாபென் என்ற பெண், தனது கணவரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த பிறகு, 22 வயதான ஷிவம்கிரி மற்றும் 15 வயதான மற்றொரு மகனுடன் வசித்து வந்தார். ஷிவம்கிரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய, அவரது தம்பி எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. எனினும், இளைய மகனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

வீட்டில் சிக்கன், பூரி, காலிஃபிளவர், அல்லது மீன் போன்றவற்றை சமைத்த பிறகு, உபயோகித்த எண்ணெயின் அடியில் மசாலா துகள்கள் மற்றும் உணவுச் சிதைவுகள் தங்குவது இயல்பு. இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினாலும், அதன் தூய்மையும், சுவையும் புதிய எண்ணெய் போல் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில எளிய சமையலறை நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், பொரித்த எண்ணெயின் தரத்தை மேம்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியும். கார்ன்ஃப்ளார் மூலம் சுத்தம் செய்தல் […]

தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் பண்டிகை விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தேர்வுகள் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இந்த சூழலில், வழக்கமாக பண்டிகை விடுமுறைகள் நிறைந்திருக்கும் மற்ற மாதங்களை காட்டிலும், நவம்பர் மாதத்தில் […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர் மொத்த காலியிடங்கள்: 1,483 கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை […]

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான புவனேஸ்வரி, நத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த இவருக்கும், அதே வடமதுரையைச் சேர்ந்த 23 வயதான நந்தகுமார் என்பவருக்கும் இடையே இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. நந்தகுமார் வடமதுரையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். மருத்துவமனையில் பயிற்சி […]

தமிழ்நாடு அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதில், ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தற்போது வரை சுமார் 1.14 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு […]

அசைவ விரும்பிகளின் வீடுகளில் முட்டை எப்போதுமே இருக்கும். தினமும் முட்டைகளை பயன்படுத்துவோர் அதிக அளவில் அவற்றை வாங்கிச் சேமித்து வைப்பதால், அவை கெட்டுப்போகாமல் பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல்கள் அவசியம். முட்டைகளை சரியாகச் சேமிக்காவிட்டால், அவை விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது. முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது கவனம் : பொதுவாக, முட்டைகளை வாங்கி வந்தவுடன் ஃப்ரிட்ஜில் வைப்பதே சிறந்த முறையாகும். பெரும்பாலான ஃப்ரிட்ஜ்களில் முட்டை வைப்பதற்கான தனி இடம் அமைந்திருக்கும். ஆனால், […]