உங்கள் வீட்டில் தொடர்ச்சியான பிரச்சனைகள், நிதி நெருக்கடி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுகிறதா? நீங்கள் எவ்வளவு முயன்றாலும் வாழ்க்கைத் தரம் உயரவில்லையா? வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இதுபோன்ற பிரச்சனைகள் அனைத்தும் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளால் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குறைபாடுகளை நீக்கி, வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும், செல்வம், செழிப்பு, மற்றும் மகிழ்ச்சியை நிலைநாட்டுவதற்கும் உங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய 7 முக்கியமான வாஸ்து பொருட்களைப் […]
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியில், திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தூண்டப்பட்ட ஆத்திரத்தில், 35 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி (35) என்ற பாதிக்கப்பட்ட பெண், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வேன் டிரைவராக […]
சென்னை மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபீத் டைட்டஸ் (25). இவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா (27) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரெபேக்காவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ரெபேக்கா தனது பெற்றோரிடம் பேசிச் சம்மதம் வாங்கி வருவதாக கூறி, மாதவரத்தில் உள்ள பெற்றோர் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மூளைச்சலவை செய்யப்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாக கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கல்லூரி மாணவி, சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சந்தித்துள்ளார். படிப்படியாக மூளைச்சலவை செய்த அக்கும்பல், மாணவியைப் பாலின மாற்றத்திற்கு […]
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) முதல் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு வருவாய்த் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருவாய்த் துறை ஊழியர்கள் நாளைய தினம் முதல் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக […]
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும். டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை : இதுதொடர்பாக […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]
இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடாமல் ஒரு நாள் கூட கடப்பதில்லை என்ற நிலை வந்துவிட்டது. நாள் முழுவதும் ரீல்களை ஸ்வைப் செய்யும் பழக்கம், இரவில் படுக்கைக்கு சென்ற பிறகும் தொடர்கிறது. இருப்பினும், படுக்கையில் படுத்தபடி தொடர்ந்து மொபைல் திரையைப் பார்ப்பது, உடலில் பல கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தூங்கும் நேரத்தில் உங்கள் மொபைலை […]
தமிழ்நாடு முழுவதும் நேற்று (நவம்பர் 16) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியில் இருந்து விலகும் நிகழ்வுகள் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காலையில் தமிழ்நாடு முழுவதும் தவெக நடத்திய போராட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மாலையில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக […]
மழைக்காலம் இனிமையான அனுபவங்களை தந்தாலும், வீட்டை பராமரிப்பதில் அது அதிக வேலைப்பளுவை உண்டாக்குகிறது. வீட்டைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகளின் பெருக்கமும், ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்கும். பொதுவாக, வீடுகளில் இருக்கும் பெண்களே இந்த மழைக்காலப் பராமரிப்புச் சவால்களை அதிகமாக எதிர்கொள்கின்றனர். எனவே, மழைக்காலத்தில் வீட்டைத் திறம்படப் பராமரிப்பதற்கான சில எளிய மற்றும் அத்தியாவசிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மழை காலத்தில் கூரை, கதவுகள், ஜன்னல்கள் வழியாக மழைநீர் வீட்டிற்குள் கசிவது […]

