இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்ட மக்களும் புத்தாடை அணிந்து, விதவிதமான பலகாரங்களுடன், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னையில், நேற்று இரவு வானம் முழுவதும் வெளிச்சம் நிறைந்திருக்க, பட்டாசுச் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் குவிந்த பட்டாசு கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை […]

காலை உணவின்போது முட்டையைத் தவிர்க்க முடியாதவர்கள் பலர். புரதச்சத்து நிறைந்த இந்த ‘சூப்பர்ஃபுட்’, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமானது. இருப்பினும், ‘முட்டைகள், குறிப்பாக அதன் மஞ்சள் கரு, கொழுப்பை அதிகரித்து இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்’ என்ற பொதுவான கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் பலர் முட்டையைத் தவிர்ப்பது அல்லது மஞ்சள் கருவை மட்டும் ஒதுக்குவது உண்டு. உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வியாபாரி சுரேந்திரன், தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொச்சி அருகே உள்ள குன்னத்துநாடு, வெங்கோலா பகுதியில் வசித்து வந்தார். அடுத்த ஒரு வாரத்தில் அவரது மகளுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்காக வீட்டில் சுமார் 15 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் சுரேந்திரன் திடீரென மாயமானார். அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், […]

தமிழ்நாடு அரசு, சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் 3 முக்கியத் திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் சுயதொழில் தொடங்குவதற்கான மானியம், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெறும் வசதி ஆகியவை அடங்கும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் விதமாக, நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் மானியம் வழங்குகிறது. […]

நாடு முழுவதும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இந்த ஒளியின் திருநாளைக் கொண்டாடினர். இருப்பினும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாகச் […]

சப்த கன்னிகளுள் ஒருவராகத் திகழும் வாராகி அம்மன், உருவத்தில் மாறுபட்டிருந்தாலும் தாய்மை நிறைந்த உள்ளம் கொண்ட தெய்வம். துயரத்தோடு தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு அருள்புரியும் அற்புதமான சக்தி கொண்டவள் இந்த அன்னை. வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான வழிபாடு, நம்முடைய துயரங்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. கடன், நிம்மதியின்மை, தொடர் தோல்விகள் எனப் பிரச்சனைகள் […]

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பான்புரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாகக் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதில் பங்கேற்ற சில மாணவிகள் உடை மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறைக்குச் சென்றபோது, 4 மாணவர்கள் மிகவும் அருவருக்கத்தக்க செயலில் […]

டெல்லி உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) வழங்குவது தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பணியில் இருக்கும் மற்றும் நிதி ரீதியாகச் சுயமாகச் சம்பாதிக்கும் பெண்கள், தங்கள் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கான வரம்புகளை இந்தத் தீர்ப்பு விளக்குவதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஒரு வழக்கறிஞருக்கும், இந்திய ரயில்வேயில் ‘குரூப்-ஏ’ அதிகாரியாகப் பணியாற்றும் […]

அமெரிக்காவில் அடுத்த 12 மாதங்களுக்குள் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 35% ஆக இருந்த நிலையில், தற்போது 30% ஆகக் குறைந்துள்ளதாக குளோபல் ரேட்டிங்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் சத்யம் பாண்டே தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைத்த வர்த்தகப் போரின் தாக்கத்தால் உலகப் பங்குச்சந்தைகள் ஏற்கனவே சரியத் தொடங்கியுள்ளன. ஜேபி மோர்கன் (J.P. Morgan) போன்ற நிதி நிறுவனங்கள், அமெரிக்க […]

தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் ‘கங்கா ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்துப் பொதுமக்கள் இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது பட்டாசு வெடிப்பதைத்தான். வண்ணமயமான வானவெடிகளையும், சத்தமிடும் பட்டாசுகளையும் வெடித்து மகிழ்வது தீபாவளியின் பிரிக்க முடியாத பாரம்பரிய அங்கமாக உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான […]