fbpx

அமெரிக்காவின் அரிசோனா விமான நிலையத்தில் நேற்று இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு மரானா பிராந்திய விமான நிலையத்தில் லங்காயர் 360 MK II விமானமும், செஸ்னா 172S விமானமும் மோதிக்கொண்டதாக மத்திய விமான நிர்வாகம் …

போப் பிரான்சிஸ் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால், வத்திக்கானில் அவரது இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவராக இருந்து வருபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு வயது 88. இந்நிலையில், இவரின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் …

தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை 3 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீடு, கடைகளுக்கு மின்சாரம் கோரி விண்ணப்பித்தோருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கு டிரான்ஸ்பார்மர் …

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பதவிகள் மும்பை அல்லது டெல்லியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அதன்படி விற்பனை ஆலோசகர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ …

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரிகோடு அருகே கால்பந்து மைதானத்தில் பட்டாசு வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கால்பந்து போட்டி தொடங்குவதற்கு சற்றுநேரத்திற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரிக்கோடு அருகே உள்ள தேரட்டம்மலில், கால்பந்து போட்டியின் இறுதி …

2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் முன்பை விட அதிகமாக இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.

2032ஆம் ஆண்டில் 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், வானியலாளர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள், பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரியது என்று …

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், திறந்த செல்களின் விலைகள் அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் உள்ள பல தொலைக்காட்சி பிராண்டுகள் விலைகளை 7% வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலவீனமான ரூபாய் மதிப்பும் அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளும் 2025ஆம் ஆண்டில் …

குஜராத் மாநிலத்தில் நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அதில் ஒரு மாணவர் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். …

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீசில் புகார் …

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின் தலைவர் முஸ்தபா மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தான் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த அக்டோபர் கட்சி மாநாட்டை பிரம்மாண்டமாக …