விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையில் உள்ள மடுகரை பகுதியில், தன்னுடைய மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த சக ஊழியரை, கணவரே மது அருந்த அழைத்துச் சென்று கழுத்தைக் கிழித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்பவர், தன் குடும்பத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லையான மடுகரை பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் பிளைவுட் […]
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), கடந்த நான்கு நாட்களாகத் தொடரும் விமான ரத்து மற்றும் தாமதங்களால் பயணிகளைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இன்றும் (வெள்ளிக்கிழமை) டெல்லி மற்றும் திருவனந்தபுரம் உட்பட பல முக்கிய விமான நிலையங்களில் இருந்து புனே போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 6E 2343, 6E 2471 மற்றும் 6E 6692 உள்ளிட்ட சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுச் […]
தற்போது நிலவும் அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ (Facial Paralysis) எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா எச்சரித்துள்ளார். முகவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். முகவாதம் என்றால் என்ன? முகத்திற்கு உணர்வை அளிக்கும் முக நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி அல்லது வைரஸ் தொற்று போன்றவற்றால் உருவாகும் பாதிப்புதான் […]
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மூதாட்டி ஒருவரை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வசிக்கும் சரோஜா என்ற மூதாட்டியின் வீட்டை ஒட்டியே சாலை அமைக்கத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். அப்போது, மூதாட்டி சரோஜா, […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், இயக்குநர் போயபதி ஶ்ரீனுவின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘அகண்டா 2’ திரைப்படம், இன்று (டிசம்பர் 5) வெளியாவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் நிறுவனம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. “கனத்த இதயத்துடன் இந்தப் painful செய்தியை அறிவிக்கிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அகண்டா 2 திரைப்படம் […]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து, தற்போது ரூ.90.43 என்ற உச்சத்தைத் தொட்டிருப்பது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த சமீபத்திய சரிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு எப்படி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை பின்வரும் […]
இன்றைய பொருளாதார சூழலில், படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பதை விட, சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேற நினைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கான தேவை சந்தையில் எப்போதும் அதிகம் என்பதால், இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இலவச பயிற்சி முகாம் விவரம் : திருவள்ளூர் மாவட்டம், கோடுவள்ளியில் அமைந்துள்ள பால் மற்றும் உணவுத் தொழில்நுட்பக் […]
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு அமல்படுத்தப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் பதற்றம் நிலவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தார். கார்த்திகை தீபத்திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் […]
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பட்நாயக் (45). இவர், தனது குடும்பத்தின் 97 லட்சம் ரூபாய் கடன் சுமையை அடைப்பதற்காக துபாயில் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து வருகிறார். இவரது மனைவி உமா பட்நாயக் (45) மற்றும் மகள் பிரியங்கா (16) ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், வீட்டு வேலைகளுக்கு உதவ வேண்டி, உறவினர் மகனான […]
சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 35 வயது பெண் காவலர் ஒருவரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறிப் பழகி, பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளைஞரை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அந்தப் பெண் காவலர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரைப் பிரிந்து, 2 மகள்களுடன் அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 8 […]

