கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் டவுன் பஸ் ஸ்டாண்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரத்தில் 16 வயது சிறுமி தன்னுடைய தம்பியுடன் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், தான் வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக சொல்லி சிறுமியை அழைத்துள்ளார்.
உடனே சிறுமியும் தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். கொஞ்ச தூரம் சென்றதுமே அந்த ஆட்டோவில் இன்னொரு நபரும் ஏறிக்கொண்டார். அவர் தன்னுடைய நண்பர் என்று சிறுமியிடம் ஆட்டோ டிரைவர் சொன்னார். பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்று, டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
சிறுமியும் அவரது தம்பியும் கத்த தொடங்கினர். எங்கே மாட்டிவிடுவோமோ என்ற பயத்தில் 2 பேரும் சேர்ந்து சிறுமி மற்றும் அவரது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அந்த சிறுவன் மயங்கி விழுந்துவிட்டான்.. பிறகு ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.. சிறுமியிடம் இருந்த செல்போன் , பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தம்பியை மீட்டு மீண்டும் அரசு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்.. பிறகு அங்கிருந்த கடைக்காரர்களின் உதவியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரையும், நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Read more: ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்; ஆனா தவறுதலாக அதன் விதையை சாப்பிட்டால் மரணம் ஏற்படுமா?



