நடிகர் விஜய் கையில் பேண்டேஜ் – ‘GOAT’ படப்பிடிப்பின்போது விபத்தா?

இன்று வாக்களிக்க வந்த நடிகர் விஜய்யின் கையில் பேண்டேஜையை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்தார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்குள் வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை வாக்களிக்க அழைத்து சென்றனர். அப்போது விஜய்யின் கையில் பேண்டேஜ் போட்டியிருந்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற்று வரும் ‘GOAT’ படப்பிடிப்பில் பைக் சேசிங் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், அப்போது விஜய்யின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More:

Baskar

Next Post

மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்; வன்முறை கும்பல் துப்பாக்கிச்சூடு.சூறையாடப்பட்ட வாக்குச்சாவடி

Fri Apr 19 , 2024
மணிப்பூரில் மக்களவை தேர்தலின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டால் ஆத்திரமடைந்த மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் […]

You May Like