பூசாரிகளால் பிறந்தது தான் ஜாதி! மும்பை கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!

சாதிகளை உருவாக்கியது பூசாரிகள் தான்  கடவுள் இல்லை என  ஆர் எஸ் எஸ் இன் தலைவர் மோகன் பகவத் மும்பையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். ராஷ்ட்ரிய சுயம் சேவக் இது இந்தியாவில் இருக்கக்கூடிய  மதவாத அமைப்புகளில் ஒன்று  இதன் தலைவராக இருப்பவர்  மோகன் பகவத் . இந்த அமைப்பானது மகராஷ்டிரா மாநிலம்  நாக்பூரை தலவிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  ஒரு அமைப்பு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்து வரும் திரு மோகன் பகவத்  புனித சிரோமணி  ரோகிதாசின் 647 வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற  ரவீந்திரநாட்டே மந்திர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்  கடவுளைப் பொறுத்த வரைக்கும்  அவருக்கு மக்களிடம்  பாகுபாடு என்பது கிடையாது. கடவுளுக்கு மக்கள் அனைவரும் ஒன்றுதான் என  பேசியிருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசி அவர்  பூசாரிகள் தான்  ஜாதி மத பாகுபாடுகளை சமூகத்தில் கொண்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார். கடவுள் என்பவர் பரம்பொருள் அவர்  தனது பார்வையில் அனைத்து மக்களையும்  சமமாகவே பார்க்க கூடியவர் என தெரிவித்தார். மேலும் செய்யும் தொழிலில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமே இல்லை. நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருப்பது அவசியமாகிறது எனவும் கூறி இருக்கிறார். மேலும் இருக்கும் ஒவ்வொரு வேலையும்  இந்த சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது  அதில் எது சிறந்தது? எது தாழ்ந்தது? என்று  முடிவு செய்வது யார் என கேள்வி எழுப்பி இருக்கிறார். எல்லாமே சிறந்தது தான் எல்லோரும் சமம் தான் என  அந்தக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறார் திரு மோகன் பகவத்.

Baskar

Next Post

துருக்கி-சிரியாவில் அதிதீவிர நிலநடுக்கம்.... பலி எண்ணிக்கை 1,300ஆக உயர்வு... உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Mon Feb 6 , 2023
துருக்கி மற்றும் சிரியாவில் நிகழ்ந்த அதிதீவிர நிலநடுகத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உதவி மற்றும் வழங்க தயாராக உள்ளோம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக […]

You May Like