IPL 2024 | வருகிறது புதிய கட்டுப்பாடு.!! வீரர்கள் வர்ணனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ.!!

IPL 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதன்படி ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் உடன் இணைந்த சமூக ஊடகவியலாளர்கள் ஆகியோர் போட்டி நாட்களில் மைதானத்தில் இருந்து படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் தான் வர்ணனை செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இது ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை வைத்திருப்பவர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது . இதனைத் தொடர்ந்து பிசிசிஐ ஊழியர் ஒருவர் முன்னாள் வீரரிடம் அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக பிசிசிஐ புதிய வழிமுறைகளை வழங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

போட்டி நடைபெறும் நாட்களில் மைதானத்தில் உள்ள புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிரும் அணி வீரர்கள் அனைவருமையாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் விதிகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

ஐபிஎல்(IPL 2024) போட்டிகளை ஒளிபரப்பு அதற்கான உரிமையை பெரும் தொகை கொடுத்து ஒளிபரப்பாளர்கள் வாங்கி இருக்கிறார்கள். அதனால் வர்ணனையாளர்கள் போட்டி நடைபெறும் நாளில் மைதானத்தில் உள்ள புகைப்படங்களையோ வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. வர்ணனையாளர்கள் ‘இன்ஸ்டாகிராம் லைவ்’ செய்த அல்லது மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிறது. மேலும் ஒரு வர்ணனையாளரின் வீடியோ உன் மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

ஐபிஎல் அணிகள் கூட நேரடியான வீடியோக்களை வெளியிட முடியாது. அவர்கள் குறைந்த அளவிலான புகைப்படங்கள் மற்றும் போட்டிகள் குறித்த அப்டேட்டை தங்களது சமூக வலைதளத்தில் பகிரலாம். விதிமுறை மீறப்பட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்ததற்காக ஐபிஎல் அணிக்கு பிசிசிஐ 9 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் போட்டிகளின் இணையதள உரிமையை Viacom18 நிறுவனமும் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் பெற்று இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை கண்காணிப்பதற்காக சிறப்பு பணியாளர்களை பிசிசிஐ நியமித்திருக்கிறது. இவர்கள் ஐபிஎல் போட்டியின் வர்ணனையாளர்கள் அணி வீரர்கள் மற்றும் அவர்களது சமூக வலைதள பக்கங்கள் ஆகியவற்றில் போட்டி குறித்த நேரடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பார்கள் எனவும் பிசிசிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

Read More: SYDNEY: பிரசங்கத்தின் போது கத்தியால் குத்தப்பட்ட பாதிரியார்.!! பதற வைக்கும் வீடியோ காட்சி.!!

Next Post

இரவு தூங்குவதற்கு முன்பு மறக்காம இதை மட்டும் செய்யுங்க…! உங்கள் கஷ்டங்கள் இரவோடு மாறிவிடும் …!

Mon Apr 15 , 2024
என்னதான் பணக்காரணாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கஷ்டங்கள் உள்ளது. கஷ்டம் இல்லாத மனிதன் இந்த உலகில் யாரும் இல்லை. சிலருக்கு பணக் கஷ்டம் ,சிலருக்கு பணமிருந்தும் நிம்மதி இல்லை என்ற கஷ்டம், கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதால் கஷ்டம் என்று பல வழியில் கஷ்டங்கள் வாழ்வில் வந்து போகிறது. இந்த அனைத்து கஷ்டங்களும் […]

You May Like