தினமும் 3 கப் டீ குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

பொதுவாக தற்போது அனைவரது வீடுகளிலும் காபி மற்றும் டீ போன்ற பானங்களை காலை, மாலை என இரு வேளைகளிலும் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்படி காபி, டீ என அடிக்கடி குடிப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வந்தாலும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு டீ குடிப்பது உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

குறிப்பாக காபியை விட டீ குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மையாகும். டீ பிடிக்காதவர்கள் என்பது இந்தியாவில் மிகவும் வெகு சிலர்தான். அந்த அளவிற்கு டீ என்பது இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவு பொருளாக கருதப்பட்டு வருகிறது. தற்போது பலரும் மன அழுத்தத்தினால் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் ஒரு நாளைக்கு 3 கப் டீயை குடித்து வரும்போது மன அழுத்தம் குறைகிறது என்று ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிகரித்து முதுமையை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் வளர்வதை கட்டுப்படுத்துகிறது. இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்துடன் இருந்து வரலாம். மேலும் ஒரு சிலருக்கு பாலில் செய்யப்படும் டீ நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலம் அதிகமாகுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்புடையாவர்கள் பால் சேர்க்காமல் தேநீர் அருந்தி வரலாம். பால் டீ யை விட பிளாக் டீ உடலுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

”ஒரே நாடு, ஒரே தேர்தல்” 2024ல் வருவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு!… அண்ணாமலை பேச்சு!

Thu Feb 15 , 2024
2024-ம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும். மத்திய அமைச்சர் […]

You May Like