ஜன்னலை திறந்து வைத்தே ரொமான்ஸ்.!! பக்கத்து வீட்டு ஜோடி மீது புகாரளித்த பெண்.!! நடந்தது என்ன.?

தண்ணீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், வறட்சி போன்றவற்றால் சிலிக்கான் சிட்டியான பெங்களூரு தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெங்களூரு நகரின் அவலஹள்ளி பகுதியில் வசிக்கும் 44 வயது பெண் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் விசித்திரமான புகார் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகாரில் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோடி எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டு உல்லாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அளித்துள்ள புகாரில் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினர் வெளிப்படையாக உல்லாசமாக நடந்து கொண்டுள்ளனர். இது எனது குடும்பத்தினரை வருத்தம் அடையச் செய்கிறது. இது தொடர்பான கண்ணதாசவுகரியத்தை அந்தப் பெண் குறித்த தம்பதியினரிடம் பகிர்ந்து கொண்ட போது அவர்கள் புகார் செய்த பெண்ணை கொலை மற்றும் கற்பழிப்பு செய்து விடுவதாகவும் விரட்டி இருக்கின்றனர்.

கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு தம்பதியினர் உல்லாச நடவடிக்கையில் ஈடுபடுவது எரிச்சலையும் அசோகரியத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வன்முறைக்கும் வழி வகுப்பதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரும் அவரது மகனும் இந்த சர்ச்சையான ஜோடிக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

வீட்டின் உரிமையாளர் சிக்கனா மற்றும் அவரது மகன் மஞ்சுநாத் ஆகியோர் அந்த தம்பதியினருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார் . மேலும் பிறரின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என தன்னை எச்சரித்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து குறித்த தம்பதிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 504, 506, 509, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், குற்றமிழைப்பு, வார்த்தை, சைகை போன்ற குற்றங்கள் குறித்து காவல்துறை தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது.

Read More: பிரபல நடிகை கவலைக்கிடம்..!! நிதியுதவி கேட்டும் முன்வராத திரையுலகினர்..!! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Next Post

BJP கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு..!! தினகரன் எங்கு போட்டி..?

Wed Mar 20 , 2024
பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாஜக தலைமை தொகுதிகளை அறிவித்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். குக்கர் […]

You May Like