திருடர்கள் எதையெல்லாமோ திருடி பார்த்திருப்போம். பல கோடி மதிப்புள்ள பொருட்களைக் கூட திருடிச் சென்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஒருவர் வீட்டிற்குள் திருடன் நுழைந்தால், அங்கு இருக்கும் தங்கம், வெள்ளி, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைத்தான் திருடுவான். ஏன், படங்களில் வருவது போல் ஃபிரிட்ஜ், டிவி போன்ற பொருட்களைக்கூட திருடிச் சென்ற சம்பவங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு விசித்திரமான திருடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் விட்டுவிட்டு, பெண்களின் உள்ளாடைகளை மட்டுமே குறிவைத்து திருடிய வினோத சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
இந்தியாவின் பெங்களூரு அருகே உள்ள ஒய்சாலா பகுதியில் கடந்த சில மாதங்களாக பெண்கள் உலர வைக்கும் உள்ளாடைகள் மர்மமாக காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்பாளர்கள் குழப்பத்திலும் அச்சத்திலும் இருந்தனர். மேலும், சில நேரங்களில் காணாமல் போன உள்ளாடைகள் மீண்டும் அதே இடத்தில் தோன்றியதோடு, வேறு சில உள்ளாடைகள் மாயமாகியிருப்பதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளின் பால்கனி மற்றும் துணி உலர்த்தும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். அதன் பின்னர் அதிகாலை நேரத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடையை எடுத்துச் செல்வதுடன், அதை அங்கேயே அணிந்துகொள்வதும் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கேமரா காட்சிகளுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
காட்சிகளில் பதிவான தகவல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிவதில் அவருக்கு வினோதமான மனநிலை சார்ந்த ஈர்ப்பு (fetish) இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், அதிகாலை நேரங்களில் வீடுகளுக்குள் நுழைந்து இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஒய்சாலா பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குறிப்பாக பெண்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.
Also Read: “என் புருஷன 3 பீஸா வெட்டுடா…” கள்ளக்காதலுக்காக பெண் செய்த கொடூர செயல்!



