MUMBAI | மெட்ரோ ரயிலில் குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகை.! வைரல் வீடியோ.!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடன கலைஞரும் நடிகையுமாக இருப்பவர் நோரா ஃபதேஹி. சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மட்கான் எக்ஸ்பிரஸ். இந்தத் திரைப்படத்தில் இவருடன் திவ்யந்து, பிரதிக் காந்தி ரெமோ டிசோசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். குணால் கேமு இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்விற்காக பல குழுவினர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி இந்த படத்தின் நாயகி நோரா ஃபதேஹி மற்றும் படக்குழுவினர் மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்து குத்தாட்டம் ஆடி தங்கள் படத்திற்கு ப்ரமோஷன் செய்தனர். போது படக் குழுவினருடன் இணைந்து பயணிகளும் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவரது இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக. இவனை பல்வேறு ரசிகர்களும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். திரைப்படங்களுக்காக பலரும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் காலத்தில் இந்தப் பட குழுவினரின் வித்தியாசமான முயற்சி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Next Post

LOK SABHA | "சாயம் வெளுத்துப் போச்சு" - நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்.!

Sat Mar 9 , 2024
வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்திருக்கிறது. இன்று காலை அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தங்களது கட்சி வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் திமுக மற்றும் காங்கிரஸ் […]

You May Like