வீட்டிலிருந்த பப்பாளி மரத்தினை தாய் வெட்டியதற்கு சிறுவனின் வியக்கத்தக்க செயல்..!

கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார்.


வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் கிடைக்கும் என்று தாயை சிறுவன் அழுது கொண்டே திட்டுகிறான்.

இந்த நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அனைவரும் சமாதானம் படுத்த முயன்றும் முடியவில்லை. இதனையடுத்து சிறுவனின் தாயார் இந்த மரத்தை வெட்டியதற்காக நான் 10 மரங்களை நடுகிறேன் என்று சிறுவனிடம் உறுதி கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து சிறுவன் தன்னுடைய அழுகையை மெல்லமாக நிப்பாட்டினான். மேலும் இந்த சிறுவனின் இந்த வயதிலே இருக்கும் பொறுப்பை பார்த்து வியந்த மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

1newsnationuser5

Next Post

பெற்றோர் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி! கடைசியில் நடந்த கொடூரம்!

Tue Dec 6 , 2022
90ஸ்-களில் பிறந்த ஆணும் சரி, பெண்ணும் சரி இன்னமும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இந்த 2k கிட்ஸ் செய்யும் செயல்களுக்கு கொஞ்சம் கூட அளவே இல்லாமல் போய்விட்டது. சிறு வயதிலேயே பெற்றோர்களை மீறி திருமணம் செய்து கொள்வது, சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பெரிய முடிவுகளை எடுப்பது என்று அவர்களின் எண்ணம் வித்தியாசமாகவே இருக்கிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவிக நகரைச் சார்ந்தவர் ராஜா. […]
husband beating wife

You May Like