மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மூளைத் திசுக்களைப் பாதிக்கக்கூடிய அமீபாவால் ஏற்படும் ஆபத்தான மூளைத் தொற்று நோய் கேரளாவில் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்த நோய்த்தோற்று பிற மாவட்டங்களுக்கும் பரவி வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 19 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாசுபட்ட தண்ணீரில் குளிக்கும்போது அமீபா தொற்று ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியே அமீபா சென்று மூளையை பாதித்து, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்கிறது. இது தொற்று நோய் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். எனவே பெரிய அளவில் பதற்றமடைய வேண்டியதில்லை. அசுத்தமான குளம் குட்டைகளில் குளித்ததால்தான் நேக்லேரியா ஃபோவ்லேரி (Naegeleria Fowleri) என்ற அமீபா ஏற்பட்டு, அரிதான மூளைக் காய்ச்சல் நோயான, முதன்மை அமீபிக் மெனிங்- என்சஃபலிட்டிஸ் (Primary Amoebic Meningo-Encephalitis (PAM) நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள் & சிகிச்சை
மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தொடக்கத்தில் ஏற்படும். பின்னர், கழுத்து விறைப்பு, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
சிகிச்சை தாமதமாகத் தொடங்கினால், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூஞ்சை காளான் மருந்துகளும், பிற சிகிச்சைகளும் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும். சுத்திகரிக்கப்படாத நீரில் நீச்சல் அடிப்பதையும், மூக்கினுள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம். மூக்கில் நீர் செல்லும் வாய்ப்பு உள்ள இடங்களில், மூக்கை மூடுவது நல்லது.



