மூளையில் ரத்த கசிவு.. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்? தங்கை வசம் சென்ற அதிகாரம்? உலக நாடுகளை உலுக்கிய சம்பவம்!

Kim Jong Un 2026

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு காரணமாக கோமாவுக்கு சென்று விட்டதாகவும் சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று இரவு முதல் தகவல் பரவியது. சிலர் அவர் இறந்து விட்டதாகவும் கூறினர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து சீன ஜனநாயக கட்சியின் தலைவர் வான்ஜுன் ஸியே வெளியிட்டுள்ள பதிவில், கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது உடல் வடகொரியாவுக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.

கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ-ஏ வசம் ஆட்சி செல்லாமல், அவரது தங்கை கிம் யோ-ஜாங் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார். வடகொரியாவில் உள்நாட்டு குழப்பம் வெடிக்காமல் தடுக்க 9,000 சீனப் படைகள் பியாங்யாங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறி இருந்தார்.

இந்த தகவல்களை வடகொரிய அரசு, சர்வதேச அமைப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்பும் கிம் ஜாங் உன் மரணம் குறித்து பல தகவல்கள் பரவி, பின் அது வதந்தி என உறுதியானது. இப்போது பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைக்க வடகொரிய ஊடகங்கள் நேற்று ஆடை கண்காட்சியை கிம் ஜாங் உன்னும் அவரது மகளும் பார்வையிடுவது போன்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளன.

Read More : இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்! சென்னைக்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

Next Post

நான் சென்னைக்கு புதுசு! 30 செ.மீட்டருக்கு மேல் மழை வந்தால் என்ன செய்ய முடியும்? இயற்கையை கணிக்க முடியாது! அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி!

Tue Oct 20 , 2026
வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15 பகுதியில் உள்ள மழைநீர் செல்லக்கூடிய வடிகால்வாய் மற்றும் கெனால் பகுதிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஈசிஆர் ஓஎம்ஆர் இடையே உள்ள பக்கிங்காம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், மடிப்பாக்கம் வீராணம் ஓடை, ஓக்கியம் மடுவு ஆகிய பகுதிகளையும் பார்வையிட்டார். கடந்த சில ஆண்டுகளாக மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், தற்பொழுது […]
Minister Vignesh 2026

You May Like