இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்! சென்னைக்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

rain tamilnadu weatherman 1

தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் பொதுமக்களை வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போது வடசென்னைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், இது படிப்படியாக நகரின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழைப் பொழிவு இன்று முதல் மீண்டும் வேகம் எடுக்கும். பகல் நேரங்களில் இடை இடையே வெயில் அடித்தாலும், திடீரென குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழைப் பதிவுகள் ஆங்காங்கே காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து, அதிகாலை வரை நீடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Read More : மஞ்சள் பால் முதல் இஞ்சி வரை.. பாட்டி காலத்து 10 வீட்டு வைத்தியங்கள்!

Next Post

நிர்வாணமாக கிடந்த நர்ஸ் உடல்! பைக்கில் அழைத்துச் சென்று கதையை முடித்த சக ஊழியர்! ராமநாதபுரத்தில் திடுக் சம்பவம்!

Tue Oct 20 , 2026
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி உத்ரா வயது 26. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இவர்கள் திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். ரஞ்சித்குமார் இறைச்சி கடையிலும், உத்ரா அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி முதல் நர்சாக பணியாற்றி வந்தார். மனைவியை தினமும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது ரஞ்சித்குமாரின் வழக்கம். கடந்த […]
Crime 2026 1

You May Like