Breaking : 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! கண்டிப்பா ட்ரம்புக்கு இல்ல..!

maria 1760087142 1

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது..


இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும்” மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

RUPA

Next Post

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈஸ்வரி.. என்ட்ரி கொடுக்கும் புது வில்லன்.. திக்குமுக்காடும் ஆதி குணசேகரன்..!! எதிர்நீச்சல் தொடர்கிறது..

Fri Oct 10 , 2025
‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. திருமண மண்டபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் குணசேகரன் முழுமையாக மன அழுத்தத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார். யாரிடமும் பேசாமல் மாடிக்கு சென்று கதவை அடைத்து அழுது கொண்டிருக்கும் குணசேகரனைப் பார்த்து குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்கிறது. ஞானம் கோபத்தில், “நம்ம வீட்டு மரியாதை போச்சு… யாரையும் சும்மா விடக்கூடாது!” என்று கோபத்தில் வெடிக்கிறார். விசாலாட்சியும், “இந்தக் குடும்பம் இப்படி உடைந்து போயிடுச்சே!” என […]
edhirneechal serial

You May Like