என்ன வாக்கு விழல.. EVM-ல் பட்டனுக்கு பதில் லைட்டை அழுத்திய திண்டுக்கல் சீனிவாசன்..

dindugal srinivasan voting

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.. காலை முதலே  பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..


முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாக்குப்பதிவு செய்தனர்.. திரைப்பிரபலங்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, குஷ்பு, ஜோதிகா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில் திண்டுக்கல் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் போது திண்டுக்கல் சீனிவாசனுக்கு குழப்பம் ஏற்பட்டது.. தன் முறை வந்த போது, சீனிவாசன் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னத்திற்கு அருகில் உள்ள பட்டனை அழுத்துவதற்கு பதிலாக அதற்கு அருகில் இருந்த சிறு விளக்கை தொட்டு அழுத்திக் கொண்டிருந்தா.. இதனால் அவரின் வாக்கு சரிவர பதியவில்லை..

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர் சீனிவாசனிடம் அணுகி, விளக்கை அழுத்தாதீர்கள் அதற்கு அடியில் பட்டனை அழுத்துங்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து சீனிவாசன் சரியான பட்டனை அழுத்தி வெற்றிகரமாக வாக்களித்தார்..

இந்த சம்பாம் வாக்குச்சாவடியில் இருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.. வேட்பாளருக்கே வாக்கு எந்திரத்தை சரியாக இயக்க தெரியாத நிலை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

Read More : காவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது.. டிஜிபி அதிரடி உத்தரவு..!

RUPA

Next Post

பழிவாங்கும் ராகு மற்றும் கேது... இந்த 5 ராசிகளுக்கும் அடுத்த சில மாதங்கள் கடினமாக இருக்கும்..!

Thu Apr 23 , 2026
Rahu and Ketu take revenge... The next few months will be difficult for these 5 zodiac signs..!
rahu ketu

You May Like