Breaking : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. தங்கம் விலை ரூ.1,040 குறைவு..! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

gold jewlery

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.130 குறைந்து ரூ.14,500-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..! அதிமுக அடையாளங்களை தவிர்த்த விஜய பாஸ்கர்.. திமுகவா..? தவெகவா..?

English Summary

In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 1,040 per sovereign and is being sold at Rs. 1,16,000.

RUPA

Next Post

32 மில்லியன் கொசுக்களை களமிறக்கும் கூகுள் நிறுவனம்.. எதற்காக தெரியுமா..? வியக்க வைக்கும் தகவல்..!

Mon Jun 1 , 2026
கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்கும்போது, மில்லியன் கணக்கான கொசுக்களை விடுவிப்பது என்பது உங்கள் மனதில் தோன்றும் முதல் தீர்வாக இருக்காது. ஆனாலும், கூகுள் முன்மொழிவது இதுதான். கொசுக்களால் பரவும் நோய்களைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிசோதனையின் கீழ், புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் 2 ஆண்டுகளில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 32 மில்லியன் கொசுக்களை விடுவிக்க கூகுள் அனுமதி கோருகிறது. இந்த முன்மொழிவு, நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் […]
mosquito

You May Like