இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..! அதிமுக அடையாளங்களை தவிர்த்த விஜய பாஸ்கர்.. திமுகவா..? தவெகவா..?

eps vijaya bhaskar

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜயபாஸ்கரும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை எழுந்தது.. அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்..


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தவெகவில் இணையப் போவதாக கூறுவது வெறும் யூகம் தான் என்றும் அவர் தெரிவித்தார்.. மக்கள் சொன்ன கருத்துகளை உள்வாங்கி இருக்கிறேன்.. தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. எனக்காக கட்சியில் உழைத்தவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது தான் என் முடிவாக இருக்கும்.. இந்த மாதிரியான நேரத்தில் மக்களின், நிர்வாகிகளின் கருத்துகளை கேட்காமல் முடிவெடுக்க முடியாது..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் விஜய பாஸ்கர் அதிமுகவின் அடையாளங்களை தவிர்த்து வருவது தமிழக அரசியல் விவாதப் பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விஜயபாஸ் உரையாற்றினார்.. அப்போது அவர், தனது உரையின் ஒரு இடத்தில் கூட ‘அதிமுக’, பொதுச்செயலாளர் ‘இபிஎஸ்’ (EPS) அல்லது கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ ஆகிய முக்கிய அடையாளங்களை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.. விஜய பாஸ்கரின் இந்த பேச்சு, தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் அதிமுக துண்டுடன் வலம் வரும் அவர், இந்நிகழ்ச்சியில் அதை அணியாமல் வந்ததும் பேசுபொருளாகியுள்ளது.

விஜயபாஸ்கர் சார்பாக விநியோகிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பிதழிலும் கட்சியின் பெயர், சின்னம் அல்லது தலைவர்களின் படங்கள் என எந்தவொரு அதிமுக அடையாளமும் இடம் பெறவில்லை. ஏற்கனவே சிவகங்கையில் பொன்மணி தவெக-வுக்குத் தாவிய பரபரப்பு அடங்குவதற்குள், சி.விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் மாற்றம் எடப்பாடி பழனிசாமி தலைமைக்க ஏற்பட்ட மற்றொரு பின்னடைவகவே கருதப்படுகிறது..

மேலும் விஜய பாஸ்கர் தவெகவில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் திமுகவில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.. எனினும் விஜய பாஸ்கர் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.. விஜய பாஸ்கர் தவெகவில் இணைவாரா அல்லது திமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Read More : 46 பேர் பலி.. சுரங்கக் கட்டிடத்தில் வெடிபொருட்கள் வெடித்து சிதறி விபத்து.. மியான்மரில் சோகம்..!

English Summary

Vijaya Bhaskar’s avoidance of AIADMK symbols has become a subject of political debate in Tamil Nadu.

RUPA

Next Post

Breaking : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்.. தங்கம் விலை ரூ.1,040 குறைவு..! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

Mon Jun 1 , 2026
In Chennai today, the price of ornamental gold has dropped by Rs. 1,040 per sovereign and is being sold at Rs. 1,16,000.
gold jewlery

You May Like