#Breaking : ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொலை: யார் இவர்?

houthi pm

ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார்.

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது.


ஹவுதி குழுவின் பாதுகாப்பு அமைச்சர் முகமது அல்-அதிஃபியும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். தவிர, தலைமைத் தளபதி முகமது அப்துல்-கரீம் அல்-கமாரி உட்பட பிற உயர் அதிகாரிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஏமனின் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹவுதிகள் ஈரானின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.. மேலும் ஹவுதிகள் “பிராந்திய ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி உலகளாவிய சுதந்திரத்தை சீர்குலைத்து வருகின்றனர்” என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்த தாக்குதலுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்ததாகவும், ஹவுதிகள் இந்த விளைவுகளை அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் “. இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் – அவர்களின் கை துண்டிக்கப்படும்,” என்று கூறினார்.

யார் இந்த அல்-ரஹாவி?

அகமது அல்-ரஹாவி ஆகஸ்ட் 2024 முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக பணியாற்றி வந்தார். பொது மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அல்-ரஹாவி ஏமனின் கான்ஃபாரை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தந்தை, ஒரு அரசியல்வாதியான கலேப் நாசர் அல்-ரஹாவி 1970 களில் படுகொலை செய்யப்பட்டார், மேலும் அல்-ரஹாவி பல கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். 2015 ஆம் ஆண்டில், பா டேஸில் உள்ள அவரது வீடு அல்-கொய்தாவால் தாக்கப்பட்டது, அதன் பிறகு அவர் சனாவுக்கு குடிபெயர்ந்தார்.

2019 ஆம் ஆண்டில், அல்-ரஹாவி உச்ச அரசியல் கவுன்சிலின் உறுப்பினரானார். ஆகஸ்ட் 2024 இல், உச்ச அரசியல் கவுன்சில், பொது மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழுவிலும் உறுப்பினராக இருந்த அல்-ரஹாவியை பிரதமராக்கியது. அக்டோபர் 4, 2016 முதல் ஆகஸ்ட் 10, 2024 வரை பிரதமராகப் பணியாற்றிய அப்தெல்-அஜீஸ் பின் ஹப்தூருக்குப் பிறகு அவர் பதவியேற்றார்.

ஏமனில், ஹவுதி கிளர்ச்சிப்படை தலைமையிலான அரசு, தலைநகர் சனா உள்ளிட்ட பல பகுதிகளை ஆட்சி செய்து வருகிறது. காஸா மீதான இஸ்ரேல் நடத்தி வரும் போரி, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப்படை செயல்பட்டு வருகிறது.. இதனால் இஸ்ரேல் மீது ஹவுதிகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : யானையின் தும்பிக்கையில் பீர் ஊற்றிய சுற்றுலாப் பயணி; வீடியோ வைரலானதை அடுத்து விசாரணை தொடக்கம்…

RUPA

Next Post

நோட்!. தமிழகத்தில் நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

Sun Aug 31 , 2025
தமிழகத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் நாளை முதல் (செப்.1) முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை 74 கி.மீ நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 1 முதல் புதிய கட்டணம் அமலாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக் கட்டணம் […]
Highways 1

You May Like