BREAKING | என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்..!! ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் மெஸ்ஸி..!!

Messi 2026

உலக கால்பந்து அரங்கின் முடிசூடா மன்னனும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர நாயகனுமான லியோனல் மெஸ்ஸி (39), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பிரியாவிடை அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 2026 ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்த நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு தனது சர்வதேசப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார். முன்னதாக 2016-ல் கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி தோல்விக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மெஸ்ஸி, தற்போது இரண்டாவது முறையாக தனது முழுமையான சர்வதேச ஓய்வை உறுதிசெய்துள்ளார்.

இதுகுறித்துத் தனது பதிவில் குறிப்பிட்ட மெஸ்ஸி, “இறுதிப்போட்டி முடிந்து பலமுறை ஆழமாக யோசித்த பின்னரே சர்வதேச அணியில் இருந்து விலகும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எனது மனதை மிகவும் காயப்படுத்துகிறது; இருப்பினும் விடைபெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை உணர்கிறேன். தேசிய அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன், இதற்கு மேல் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.

அர்ஜென்டினா அணியில் இடம்பிடிக்கத் தகுதியான பல இளம் வீரர்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றனர், அவர்களுக்கு வழிவிட வேண்டியது அவசியம். கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு அளித்த அளப்பரிய அன்பிற்கு நன்றி. களத்திற்குள் இருந்து உங்கள் ஆரவாரத்தைக் கேட்பதை நான் இனி நிச்சயமாக இழப்பேன். இனி நானும் உங்களில் ஒருவனாக, நல்ல நேரங்களிலும் குறிப்பாகக் கடினமான நேரங்களிலும் வெளியே இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பயணத்தில் உடனிருந்த குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மெஸ்ஸி, மறக்க முடியாத பல நினைவுகளை சுமந்து செல்வதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68) காலமான நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த இரண்டு நாட்களில் (ஜூலை 21) தான் எழுதிய இந்த ஓய்வுக் குறிப்பை, தந்தையின் திடீர் மறைவு மேலும் தீவிரமாக உறுதிப்படுத்திவிட்டதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 20 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்த லியோனல் மெஸ்ஸியின் இந்த ஓய்வு அறிவிப்பு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More : துடிப்போடு கபடி விளையாடிய பள்ளி மாணவன்..! திடீரென சுருண்டு விழுந்து மரணம்..! வாணியம்பாடியில் சோகம்..!

You May Like