அக்டோபர் முதல் ஜிஎஸ்டி விதிகளில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ரூ.10 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட வணிகங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் B2B( Business-to-business) பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல் உருவாக்க வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) மற்றும் சுங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 20 முதல் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு கடந்த மார்ச் மாதத்தில் பதிவு மற்றும் உள்நுழைவு வசதி செயல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், ஏப்ரல் 1, 2022 முதல், ஜிஎஸ்டி மின் விலைப்பட்டியல் வரம்பை 50 கோடி ரூபாயில் இருந்து 20 கோடியாகக் குறைத்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல், ரூ.50 கோடிக்கு மேல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் B2B இன்வாய்ஸ்களை உருவாக்கி வருகின்றன, இது இப்போது ரூ.10 கோடியில் இருந்து என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரசு எதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது…?
வரி ஏய்ப்பு சம்பவங்களை குறைக்க அரசு விரும்புவதால் சரக்கு மற்றும் சேவை வரி விதிகளில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது. இது சம்பந்தமாக, 2020 அக்டோபரில், 500 கோடி ரூபாய்க்கு மேல் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் B2B பரிவர்த்தனைகளில் மின் இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தது. தற்போது இந்த வரம்பு ரூ.20 கோடியாக உள்ளது என்பதை மத்திய வரி வாரியம் மீண்டும் ரூ.10 கோடியாக குறைக்க முடிவு செய்துள்ளது.