fbpx

அனைத்தும் தயார்..! 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு…!

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

அதன் படி, இன்று பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து செயல்பட உள்ளதால், பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தம், நாேட்டுப் புத்தகம் தயார் நிலையில் உள்ளது.

Vignesh

Next Post

செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை...! மருத்துவமனை விரைந்த அமைச்சர் உதயநிதி...!

Wed Jun 14 , 2023
அமலாக்கத் துறையின் சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு […]

You May Like