fbpx

மாணவர்களே.. 1 முதல் 5-ம் வகுப்பு வரை… ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் தான் திறக்கப்படும்…! அரசு அறிவிப்பு…!

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி அன்றும் , 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

எனவே , மேற்கண்டுள்ள நாட்களில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து செயல்பட உள்ளதால், பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தம், நாேட்டுப் புத்தகம் தயார் நிலையில் உள்ளது.

Vignesh

Next Post

பயங்கர அலர்ட்...! பிபர்ஜாய் புயல் ஜூன் 15 ஆம் தேதி குஜராத் பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்...!

Mon Jun 12 , 2023
பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு எட்டு கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மும்பைக்கு மேற்கே […]

You May Like