தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால் பயணச்சீட்டு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ 1082 பேருந்துகள் இயங்கி வருகின்றன.. அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து ஆகியவை இயக்கப்படுகின்றன.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களை இணைக்கும் வகையில் 251 வழிதடங்களில் பேருந்துகள் இயங்கி வருகின்றன… இந்த பேருந்துகளில் நேரடியாக சென்றும் டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.. தமிழக அரசின் இணையதளத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்..
இந்நிலையில் தமிழக அரசின் விரைவு பேருந்தில் இருவழி பயணச்சீட்டை இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தால் பயணச்சீட்டு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.. தற்போது இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த சலுகை விழா நாட்களில் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..