fbpx

தொடரும் அட்டூழியம்..! ராமேஸ்வரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் கைது…!

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.

கடந்த வாரம் இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English Summary

10 fishermen from Rameswaram arrested in the middle of the sea

Vignesh

Next Post

World Anthropology Day : அறிவியலின் படி உலகின் முதல் மனிதர் யார்..? சுவாரஸ்ய தகவல் இதோ..

Thu Feb 20 , 2025
According to science, who was the first human in the world, Homo habilis-Homo sapiens or someone else?

You May Like