fbpx

“நடுங்க வைக்கும் கொடூரம்…..” 10 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் களிமண் திணித்து சித்திரவதை! போக்சோ பாய்ந்தது!

பீகார் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பிறப்புறுப்பில் களிமண்ணை அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த பத்து வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் மற்ற சிறுமிகளை அவர்களது வீட்டிற்கு செல்ல விரட்டி விட்டு இந்த சிறுமியை மட்டும் ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு சென்று சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் வலியால் அடித்து துடித்துள்ளார் சிறுமி. மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறது. இதனை மறைக்க அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் களிமண் மற்றும் மணலை அடைத்து வைத்திருக்கிறார் அந்த இளைஞர். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என தேடிய அவரது பெற்றோர் அந்த சிறுமியுடன் விளையாடிய மற்ற சிறுமிகளிடம் விசாரித்த போது 26 வயது இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்றதை தெரிவித்தனர் . இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தினர் கிராம மக்களுடன் பகுதிக்கு சென்று அந்த இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் அந்த இளைஞரை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இளைஞரின் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

Rupa

Next Post

5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு..!!

Mon Apr 10 , 2023
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் […]

You May Like