2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்
விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தம் இல்லாத நிலத்தில் சரக்கு முனையங்களை உருவாக்க, அதனை செயல்படுத்துபவர்கள் இடத்தை அடையாளம் கண்டு ஒப்புதலுக்கு பின்னர் முனையத்தை அமைப்பாளர்கள். ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரயில்வே இடத்தில் முனையங்களை உருவாக்க அந்த இடத்தை ரயில்வே அடையாளம் காண வேண்டும். வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் மூலம் முனையத்தைக் கட்டி இயக்க ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார்.