fbpx

வாகன ஓட்டுனர்களுக்கு அரசு வழங்கும் ரூ.1,000 நிவாரணம்‌…? இணையத்தில் பரவும் செய்தி…! உண்மை என்ன…?

தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌ என்ற பெயரில்‌ ஓட்டுனர்களுக்கு ரூபாய்‌ 1000/- நிவாரணம்‌ வழங்கப்படும்‌ என்று இணையத்தில் பரவிய செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு ஓட்டுநர்‌ மற்றும்‌ தொழிலாளர்‌ நலச்‌ சங்கம்‌, சென்னை-34 என்ற பெயரில்‌ வெளியிடப்பட்ட விளம்பரத்தில்‌ தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரணத்‌ தொகை ரூபாய்‌ 1000/- வழங்கப்பட இருப்பதாகவும்‌, அதனை பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில்‌ உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில்‌ சமர்ப்பித்தால்‌ அவர்களது வங்கி கணக்கில்‌ ரூபாய்‌ 1000/- நிவாரணத்‌ தொகை செலுத்தப்படும்‌ என தமிழக அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில்‌ பகிரப்பட்டு வருகிறது.

இதுபோன்ற அறிவிப்பு எதுவும்‌ தமிழ்நாடு அரசால்‌ வெளியிடப்‌ படவில்லை. இது தவறான தகவல்‌ ஆகும்‌ என இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுவதுடன்‌ இதனை நம்பி யாரும்‌ ஏமாற வேண்டாம்‌ என கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவலை பரப்பும்‌ நபர்கள்‌ மீது காவல்‌ துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெற்றோர்களே கவனம்.. அடினோவைரஸ் பாதிப்பால் மேலும் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. நோயை தடுக்க என்ன வழி..?

Thu Mar 9 , 2023
மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 3 குழந்தைகள் இறந்ததால், பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது. சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் […]
’வந்தாச்சு மழை சீசன்’..!! காய்ச்சல் வந்தால் என்ன செய்வது..? உடனடி தீர்வு இங்கே..!!

You May Like