fbpx

தமிழகமே… கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! நாளைக்குள் இதை செய்யவில்லை என்றால் பணம் கிடையாது…!

தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாணவியர்களின் விபரங்களை ஜூன் 30-ம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர், இதற்கான காலக்கெடு ஜூலை 10-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. அதன் பின்னர் பலர் இதற்கான விண்ணப்பங்களை இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் விண்ணப்பிக்க கால அவகாசத்தை வருகின்ற 18-ம் தேதி வரை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவியர்களும் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். நாளை கடைசி நாள் என்பதால் விண்ணப்பம் செய்யாத மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளியில் படித்த விவரங்கள், ஆதார், வங்கி கணக்கு விவரம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Also Read: தனி கல்விக் கொள்கை பற்றி செப்டம்பர் 15-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்…! குழுவின் தலைவர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு... நாடு முழுவதும் நாளை முதல் இதற்கு எல்லாம் அதிகரிக்க போகும் GST....! பொருட்கள் விலையும் உயரும்....

Sun Jul 17 , 2022
கடந்த மாதம் சண்டிகரில் நடந்த 47வது சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை, ஹோட்டல்கள் மற்றும் வங்கி சேவைகள் உள்ளிட்ட பல வீட்டுப் பொருட்கள் விலை உயரும். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகித உயர்வு நாளை  முதல் அமல்படுத்தப்படும், அதன் பிறகு சாமானியர்கள் அன்றாட பொருட்களை வாங்குவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் குறிப்பாக தயிர், லஸ்ஸி, மோர், பனீர், […]

You May Like