பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் தரஹர ஹனுமான் தோலா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, சிறுமி ஒரு சில பொருள்களை வாங்கிக்கொண்டு தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிற்க்கு வந்த போது, வீட்டில் யாரும் இல்லாததால், அவருக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த சிறுமியை அடித்து வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வலியால் துடிக்கவே அவர் அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளார். சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், அவர் அந்த சிறுமியின் உடலை கட்டிலில் போட்டுள்ளார்.
மாமா வீட்டிற்க்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர், சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சிறுமியின் மாமா வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமி கட்டிலில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிவித்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது சிறுமியின் மாமாதான் என்பதை உறுதிபடுத்திய போலீசார், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த உறவினர்களே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.