நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி, அதன்பின் நடந்த தினசரி பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்க்கிறார். இதனால் சந்தேகமடைந்த விடுதி காவலர்கள், சக மாணவிகள் ஸ்வாதியின் அறைக்கே சென்று பார்த்திருக்கிறார்கள். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது.
கதவை தட்டியும் திறக்காமலிருந்ததால் கதவை உடைத்து பார்த்ததில் ஸ்வாதி தூக்கில் தொங்கி கொண்டிருந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்திருக்கிறது. விசாரித்ததில் ஓய்வுப்பெற்ற கப்பற்படை வீரரான தியாகு சென்னை முகப்பேரை சார்ந்தவர் என்றும் அவரின் மகள் ஸ்வாதி (17). நாமக்கல் அருகே ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.இந்த தற்கொலை தகவலறிந்த ராசிபுரம் காவல் துறையினர் பள்ளி விடுதிக்கு விரைந்து சென்று முழுவதுமாக விசாரித்து மாணவியின் உடலை கைப்பற்றிருக்கிறார்கள். இதனையடுத்து மாணவியின் பெற்றோர்களுக்கு மகளை பற்றிய தகவலை தெரிவித்தது போலீசார்.
மாணவியின் இந்த தற்கொலை முடிவிற்கு காரணம் என்ன? என்ற காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவியின் அறையில் ஏதேனும் தற்கொலை கடிதம் இருக்கிறதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த தற்கொலைக்கு காரணம் பொது தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தமா? அல்லது ஏதேனும் ஆசியர்களின் மிரட்டலா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்கள்களிடம் அளிக்கப்பட்டது. மாணவியின் இந்த தற்கொலை செயல் அங்குள்ள மக்களிடம் சோகத்தை பரப்பியுள்ளது.