வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இன்று மற்றும் நாளை தினசரி 1,400 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.
கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலத்திற்கு வெள்ளிக்கிழமை 500 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 570 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடுவில் இருந்து ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்கு வசதியாக போதிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.