fbpx

“ஆபரேஷன் அஜய்” நான்கு குழந்தைகள் உட்பட 143 பேருடன் இந்தியா வந்த சிறப்பு விமானம்…!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இரண்டு நேபாள குடிமக்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 143 பேருடன் சிறப்பு விமானம் ‘ஆபரேஷன் அஜய்’ இன் ஒரு பகுதியாக நேற்று இந்தியா வந்தடைந்தது.

அக்டோபர் 7 ஆம் தேதி காசாவில் இருந்து இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக அக்டோபர் 12 ஆம் தேதி ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டது‌‌. ஏற்கனவே 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டு வந்த நிலையில் தற்போது ஆறாவது விமானம் இந்தியா வந்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை சிறப்பு விமானத்தில் பதினெட்டு நேபாளத்தை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

காசா பகுதியை தளமாகக் கொண்ட ஆயுதமேந்திய ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நிலம், வான் மற்றும் கடல் மார்க்கமாக அக்டோபர் 7 அன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து, இந்திய குடிமக்கள் மாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து வருகின்றனர். இதுவரை, 5 விமானங்கள் மூலம் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 1,200 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தனர்.

போர் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 4,400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய ஆதாரங்களின்படி, குறைந்தது 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Vignesh

Next Post

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு...! தமிழக அரசு பறந்த கடிதம்...!

Mon Oct 23 , 2023
4 % அகவிலைப்படி உயர்வை 1.7.2023 – லிருந்து தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்க கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்க கூட்டணி சார்பில் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில்; மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை (D.A), ஜூலை முதல் தேதியில் இருந்து, ரொக்கமாக வழங்கிட ஆணைப் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள […]

You May Like