fbpx

“கலிகாலம்..” 15 வயது சிறுவன் 13 வயது சிறுமியை வன்புணர்வு.! வெளியே சொல்ல கூடாதென கொலை மிரட்டல்.!

குஜராத்தில் 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி யாரிடமும் கூறினால், அந்த சிறுமியையும், அவளுடைய சகோதரனையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி, 15 வயது சிறுவன், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாகத் தெரிகிறது.

அந்த சிறுமியின் தாயும், குற்றத்தை புரிந்த அந்த சிறுவனும் ஒன்றாக பணிபுரிந்ததால், இந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்துள்ளான். தெரிந்தவர் என்ற முறையில் அந்த சிறுமி அவனை வீட்டுக்குள் அனுமதித்து அருந்துவதற்கு நீரும் கொடுத்துள்ளார். அவன் கதவை தாழிட்டு அந்தப் பெண்ணை பலவந்தமாக வன்புணர்வு செய்துள்ளான். இதைப் பற்றி வெளியில் யாரிடமும் கூறினால் அந்த சிறுமியையும் அவளின் சகோதரனையும் கொன்று விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளான்.

பயத்தில் உறைந்த அந்த சிறுமி சில நாட்கள் தனது தாயிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை. மீண்டும் தற்போது தொலைபேசியில் அந்த சிறுமியை தொடர்பு கொண்டு தான் தற்போது வீட்டிற்கு வரப் போவதாகவும் வீட்டில் உள்ள அவளின் சகோதரனை வெளியே அனுப்பவும் கூறி மிரட்டியுள்ளான். இதனைக் கேட்ட அந்த சிறுமி தனது தாய் வீட்டிற்கு வந்தபோது அழுது கொண்டு நடந்தவைகளை கூறியுள்ளார். பதறிப்போன அந்த தாய் உடனே போலீசில் புகார் அளித்துள்ளார்.

லிம்பயாட் காவல்துறையினர், அந்த சிறுவனை ஐபிசி போக்சோ, கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் பிரிவுகளின் கீழ் கைது செய்து, இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

சனாதன எதிர்ப்பு பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன்.!! நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு.!

Tue Jan 30 , 2024
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர்.திருமாவளவன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல் […]

You May Like