இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ள திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்; பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.
இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். அரசுத்தேர்வுத்துறையால் தேசிய திறனறித்தேர்வை போன்றே நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும்.