இஎஸ்ஐ எனப்படும் ஊழியர்கள் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் மாதத்தில் 16.47 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தற்காலிகத் தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024 ஏப்ரல் மாதத்தில் சுமார் 18,490 புதிய நிறுவனங்கள் ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் மேலும், ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் மூலம், நாட்டில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட 16.47 லட்சம் ஊழியர்களில், 7.84 லட்சம் ஊழியர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். 2024 ஏப்ரலில் ஊழியர் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் 3.38 லட்சம் பெண்களும் 53 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகமான இஎஸ்ஐசி தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது.