fbpx

அமெரிக்காவில் பனிப்புயலால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 16 பேர் பலி

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்தனர் இந்தச் சூழலில், அந்நாட்டில் தெற்கு பகுதியில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், திடீரென உருவான பாம் சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் இருளில் மூழ்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

புயலால் தொடர்ந்து பல விடுமுறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டும் களையிழந்து காணப்பட்டன. இந்த நிலையில் ஓஹியோவின் டொலிடோ பகுதியருகே வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kokila

Next Post

1.5 டன் தக்காளியை பயன்படுத்தி சாண்டா கிளாஸ் மணல் சிற்பம்!

Sun Dec 25 , 2022
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார். சுமார் 1500 கிலோ தக்காளியை பயன்படுத்தி 27 […]

You May Like