ராஜஸ்தான் மாநிலத்தில் ‘NEET’ தேர்விற்கு தயாராகி வந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் தங்கி நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு நீட் தேர்விற்கு தயாராகி வந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படித்து வந்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த மாணவனுடன் நட்பாக பழகி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாணவியை தான் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வருமாறு நண்பர் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பரை சந்திப்பதற்காக அங்கு சென்ற சிறுமியை அந்த மாணவன் மற்றும் அவனுடன் சேர்ந்த மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை டுடே கண்காணிப்பாளர் உமா ஷர்மா ” இந்த சம்பவத்தில் மைனர் பெண் தனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தனது நண்பர்களின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைக்கப்பட்ட சிறுமியை அவரது வகுப்பு தோழர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.