fbpx

சித்தப்பாவிடம் காதலில் விழுந்த 9-ஆம் வகுப்பு மாணவி .! பெற்றோர் எதிர்ப்பால் வந்த வினை.! விபரீத முடிவு.!

மதுரை மாவட்டத்தில் முறை தவறிய காதலால் சிறுமி மற்றும் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற 27 வயது இளைஞனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி தங்களது குடும்பத்தாரிடம் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் தங்கப்பாண்டி அந்த சிறுமிக்கு சித்தப்பா முறை என்பதால் இரு குடும்பத்தாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனவிரக்தியடைந்த காதல் ஜோடி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் சித்தப்பா மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

ரசிகைக்கு பாலியல் துன்புறுத்தல் பல லட்சம் மோசடி.! சிக்கலில் சிக்கிய தளபதி விஜய்யின் உதவியாளர்.!

Tue Dec 26 , 2023
திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் விஜயின் உதவியாளர் மீது இளம்பெண் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரை சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் […]

You May Like