fbpx

கௌரவக் கொலை: “கண்டவன் கூட காதல் கேக்குதோ.”! சொந்த அக்காவை கொடூரமாக வெட்டி சாய்த்த 17 வயது சிறுவன்.!

நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சொந்த அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகள் தங்கத்தாய்(21) அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூக இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்திருக்கிறது. அவரை காதலை கைவிடுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தி வந்த நிலையில் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்த அவரது 17 வயது தம்பி தனது அக்கா தங்கத் தாயை சராமாறியாக வெட்டி கொடூரமாக படுகொலை செய்திருக்கிறார். சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாற்று சமூக இளைஞரை காதலித்ததற்காக இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சொந்தத் தம்பியே அக்காவை கொடூரமாக கொலை செய்தது மக்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சிறுவனிடம் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

Next Post

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்: 15 வயது சிறுமி; 5 பேர்‌ கூட்டு பாலியல் வன்புணர்வு.! 2 பேர் கைது 3 பேர் தப்பி ஓட்டம்.!

Wed Dec 6 , 2023
சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமி 5 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட […]

You May Like