fbpx

17 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்முறை.! 65 வயது முதியவர் போக்சோவில் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கர்ப்பமான சம்பவத்தில் 65 வயது முதியவர் மற்றும் அரசு மருத்துவமனையின் செவிலியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி எருக்காம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக சிறுமியை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது . இதனால் சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் பரிசோதனை செய்ததில் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இது தொடர்பாக ராஜேந்திரனிடம் கேட்டபோது கருவை கலைக்கவில்லை என்றால் தாய் மற்றும் மகளை படுகொலை செய்வதாக மிரட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்வதற்காக அரசு செவிலியர் உஷா ராணி என்பவரது உதவியை நாடியிருக்கிறார் ராஜேந்திரன். செவிலியர் உஷாராணியின் உதவியுடன் ராஜேந்திரன் வீட்டில் வைத்து சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சிறுமியின் கருவும் கலைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தகவலறிந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாரணி இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார் அவரது புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் முதியவர் ராஜேந்திரன் மற்றும் செவிலியர் உஷாராணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி ரீதியாக வரை அவதூறாக பேசியதாகவும் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Next Post

படிக்கிற வயசுல தேவையா இதெல்லாம்.? போதை மாத்திரையால் மோதல்.! +2 மாணவன் கொடூர கொலை.!

Sat Dec 30 , 2023
சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்வது தொடர்பான தகராறில் 17 வயது பள்ளி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கடைக்கு செல்வதாக […]

You May Like