17 வயது சிறுமி ஒருவர் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விக்கி என்ற நபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் விக்கி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து கடந்த மே மாதம், மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தனது பெற்றோருடன் சென்றுள்ளார்.
அப்போது காவல் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள் அருண், சிறுமியிடம் நட்பாக பேசி பழகியுள்ளார். இந்நிலையில், சிறுமியும் அருணை முழுமையாக நம்பியுள்ளார். இந்நிலையில், அருண் சிறுமியை விசாரணைக்காக வெளியே அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர், சிறுமியை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மது கொடுத்துள்ளார். பின்னர், அவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் உல்லாசமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, செய்வது அறியாமல் தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் தங்களின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த விக்கி மற்றும் கான்ஸ்டபிள் அருண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு புகாரளிக்க காவல் நிலையத்திற்கு வந்த சிறுமியை, மீண்டும் காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.