அசாமில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது..
அசாமின் மஜூலி மாவட்டத்தில் உள்ள கர்மூர் அருகே உள்ள மஹரிச்சுக் பகுதியில் உள்ள கோயிலில் நேற்றிரவு கோயில் திருவிழா நடைபெற்றது.. அப்போது அந்த கோயில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக நிலையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது..
மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அமுல்யா கோஸ்வாமி இதுகுறித்து பேசிய போது “நேற்று இரவு 12 பேர் வயிற்று வலி மற்றும் வாந்தி என்று புகார் கூறி மருத்துவமனைக்கு வந்தனர். இன்று காலை மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள்.. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இது உணவு விஷம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், ”என்று தெரிவித்தார்.