fbpx

#Tngov: மாதம் தோறும் ரூ.20,000… வரும் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…! தமிழக அரசு அட்டகாசமான அறிவிப்பு….!

1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4,000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு மாணவர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்விச்சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023- ம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.

இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித்தகுதி பெற்றுள்ளவர்களிடம் இருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் வருகின்ற 29-ம் தேதி வரை பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு...

Fri Dec 16 , 2022
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும் அதன்படி நேற்று வெளியிட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தி குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

You May Like