fbpx

பெற்றோர்களே கவனம்!! மாஞ்சா கயிறு அறுந்து இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கு இரண்டரை வயது குழந்தை உள்ளது. சம்பவத்தன்று, பாலமுருகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, மாஞ்சா நூல் அவரது குழந்தையின் கழுத்தில் அறுத்துள்ளது. மாஞ்சா நூல் அறுத்ததில், அவரது இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தைக்கு 7 தையல் போட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா நூல் விற்பனையாளர் யார் என்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 100க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது போன்று மாஞ்சா கயிறு அறுந்து, பாதிக்கப்படும் சம்பவம் இனிமேல் நடக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மாஞ்சா நூல் அறுத்து சென்னையில் குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: 7 மாத கர்ப்பிணியை, 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மாமியார்…

English Summary

2-and-half-years-old-baby-was-hurt-by-maanja-thread

Next Post

இந்த சத்தம் உங்களுக்கு அமைதியையும், நிம்மதியையும் தரும்..!! ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு..!!

Mon Nov 18 , 2024
For a peaceful and happy society there should be peace and tranquility in the minds of the people.

You May Like