fbpx

பெங்களூர் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்…! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்;

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22.10.2024 அன்று பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.மணிகண்டன் மற்றும் திரு.சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

2 lakhs for the family who lost their lives in the Bangalore building collapse

Vignesh

Next Post

’பேசிக்கிட்டு இருக்கும்போது இந்த மாதிரி பண்ணாத’..!! பேட்டியின்போது செம டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்..!! நடந்தது என்ன..?

Fri Oct 25 , 2024
Talking to the media, the general secretary of Thaveka Party, Bussi Anand became tense.

You May Like